4 இடங்களில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டன லாரிகள் நீண்ட வரிசையில் நின்றன
திருச்சி, கரூர் மாவட்டங்களில் மேலும் 4 இடங்களில் அரசு மணல் குவாரிகள் நேற்று திறக்கப்பட்டன. மணல் அள்ளுவதற்காக வந்த லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
திருச்சி,
தமிழகத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் கடந்த மாதம் 29-ந்தேதி திடீர் என மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடம் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
மணல் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்க்க மணல் குவாரிகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மணல் லாரி உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார்.
மீண்டும் திறப்பு
முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா விரகாலூர் தின்னக்குளம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டு இருந்த மணல் குவாரி திறக்கப்பட்டது. அரசு சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் மணல் விற்பனை தொடங்கியது. நேற்று முன்தினம் குறைந்த அளவிலேயே லாரிகள் மணல் எடுத்து செல்வதற்காக வந்தன.
இந்நிலையில் திருச்சி கொண்டையம்பேட்டை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றிலும், தொட்டியம் அருகே சீலைப்பிள்ளையார் புதூர் கிராமத்திலும், கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தலவாடி ஆகிய இடங்களில் மூடப்பட்டு இருந்த மணல் குவாரிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாயனூர்மணல் குவாரியை கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
அணிவகுத்து நின்ற லாரிகள்
திருச்சி கொண்டயம் பேட்டை மணல் குவாரியில் மணல் எடுப்பதற்காக நேற்று அதிகாலை முதலே கொள்ளிடம் ஆற்றுக்குள் வரிசையாக லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இது தவிர திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் வரையிலும் லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன. இந்த குவாரிகளில் ஒரு யூனிட் மணல் ரூ.525க்கும், 2 யூனிட் ரூ.1050, மூன்று யூனிட் ரூ.1,575க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வரைவோலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு மணல் வழங்கி வருகிறார்கள்.
அரசு சார்பில் மணல் அள்ளி போடவேண்டியது இருப்பதால் ஒப்பந்த தொழிலாளர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் விரைவாக மணல் அள்ளும் பணி நடைபெறவில்லை. இதனால் லாரிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இன்னும் ஒரு வார காலத்திற்குள் திருச்சி, கரூர் மாவட்டங்களில் மூடப்பட்ட 15 குவாரிகளும் திறக்கப்பட்டு விடும். சில குவாரிகளில் சாலை அமைக்க வேண்டியது இருப்பதாலும், ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்க வேண்டிய து இருப்பதாலும் மணல் அள்ளுவதில் தாமதம் ஏற்படுகிறது. குவாரியில் இருந்து மணலை எடுத்து சேமித்து வைத்து இரண்டாம் விற்பனை செய்வதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது என்றனர்.