நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும்
நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
திருச்சி,
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டி மற்றும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என தடைவிதித்தும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீதித்துறையின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நீதிபதி கர்ணனுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என சுப்ரீம் கோர்ட்டு உண்மையாகவே கருதி இருந்தால் அவருக்கு எப்படி தண்டனை வழங்கியது என்பது புரியாத புதிராக உள்ளது. மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் கூறிய ஆலோசனைபடி, ஜூன் மாதம் ஓய்வு பெற போகும் நீதிபதி கர்ணனின் வழக்கை கிடப்பில் போட்டு இருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
நீட் தேர்வு
இலங்கை சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேச போவதில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முறையாக நடைபெறவில்லை. குஜராத், மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் மிக எளிதாக இருந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வை மறுபடியும் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க முன்வந்தவர்கள் கூட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். இந்நிலை மாறவேண்டும். மோடி தலைமையிலான மத்திய அரசு பாரதீய ஜனதா ஆட்சி இல்லாத மற்ற மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.