வளசரவாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து பெண் உள்பட 3 பேர் காயம்
சென்னை வளசரவாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் மெயின்ரோடு, ஏ.ஆர்.கே.நகர், 1–வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி ஜெயந்தி(25) மற்றும் குழந்தைகளுடன் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
பள்ளி விடுமுறை என்பதால் ஜெயந்தி வீட்டுக்கு அவருடைய அண்ணன் மகன் ஜனார்த்தனன்(15) வந்து உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே உள்ள பால்கனியில் தடுப்பு சுவரில் சாய்ந்தபடி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பால்கனி இடிந்து விழுந்தது. ஜெயந்தியும், ஜனார்த்தனனும் இடிபாடுகளுடன் கீழே விழுந்தனர். இதில் ஜெயந்திக்கு மார்பு, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் எழுந்து நிற்க முடியாமல் வலியால் அலறி துடித்தார். ஜனார்த்தனனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. தரை தளத்தில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கும் குப்பன் என்பவரின் காலில் இடிபாடு விழுந்ததில் அவர் காலில் காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஜனார்த்தனன், குப்பன் இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.