சொத்துவரியை செலுத்தாவிட்டால் ‘ஜப்தி’ நடவடிக்கை எடுக்கப்படும் பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சொத்துவரி செலுத்த தவறியவர்கள் உடனடியாக சொத்துவரியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கலாம்.
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்துவரி கடந்த மாதம் 15–ந்தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். அப்படி சொத்துவரி செலுத்த தவறியவர்கள் உடனடியாக சொத்துவரியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கலாம்.
சொத்து வரியை ‘செக்’ அல்லது ‘டி.டி.’ மூலம் ‘வருவாய் அதிகாரி, சென்னை மாநகராட்சி’ என்ற பெயரில் வரி வசூலிப்பாளர்கள் மூலமோ, www.chennaicorporation.gov.in எனும் ஆன்–லைன் மூலமாகவும் (கட்டணம் கிடையாது) செலுத்தலாம்.
மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கொடாக் மகேந்திரா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் இன்டஸ் இந்த் வங்கி மூலம் பணமாகவும், சென்னை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் ரிப்பன் மாளிகையில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவன சேவை மையங்களில் உள்ள கவுண்ட்டர்கள் மூலமும், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வசூல் மையங்கள் மூலமும் செலுத்தலாம்.
சொத்துவரி செலுத்தும்போது தங்களது செல்போன் எண், மின் அஞ்சல் விவரங்களை தகவல் தொடர்பிற்காக பதிவு செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.