கலெக்டர் ஆய்வு

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2017-05-12 03:30 IST
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று முன்தினம் முதல் 17–ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 38 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு ஒவ்வொரு நாளும் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேர்காணலில் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு நேர்காணலுக்கு வருபவர்களிடம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பின்னர் கால்நடைகளை கையாளும் திறனறிதல் மற்றும் நேர்காணல் போன்றவை நடைபெற்றது.

 நேற்று நடந்த நேர்காணலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோபு, திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி மற்றும் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்