கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்
கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் 150 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடைக்கானல்
ஈரோடு லோகநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவரது தலைமையில், அதே பகுதியை சேர்ந்த 9 சிறுவர்கள் உள்பட 27 பேர் ஒரு வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று அதிகாலை கொடைக்கானல் வந்த அவர்கள், அங்குள்ள சுற்றுலாதலங்களை பார்வையிட்டு ரசித்தனர். பின்னர் அவர்கள் மாலையில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை, கொல்லம்பாளையத்தை சேர்ந்த ரியாஜ் (42) என்பவர் ஓட்டினார். கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் பி.எல்.செட் கிராமம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிர்பாராத விதமாக 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த வேன் அப்பளம் போல நொறுங்கியது.
27 பேர் படுகாயம்
இந்த விபத்தில் டிரைவர் ரியாஜ், வேனில் பயணம் செய்த சரவணன், வினோத் (30), பிரசாந்த் (14), ஜூலி (25), பரிமளா (35), கார்த்தி (11) லட்சுமி (25), லோகநாத் (41), பாண்டியன் (30), வளர்மதி (50), ஹெலன்மேரி (38) ஆகியோர் உள்பட 27 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பி.எல். செட் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள், பள்ளத்தில் இருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.