பெரியபாளையம் அருகே கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வாலிபர் சாவு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைபேர் கிராமத்தில் கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வாலிபர் சாவு.;

Update: 2017-05-11 21:30 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைபேர் கிராமத்தில் இறால் உணவு தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில், உத்தரபிரதேச மாநிலம் சுவராபூர் கிராமத்தை சேர்ந்த உமேஷ்குமார் (வயது 24) என்பவர் நேற்று முன்தினம் 3–வது மாடியில் வெல்டிங் வேலைக்கு உதவி செய்த வண்ணம் இருந்தார். அப்போது அவர் கண் இமைக்கும் நேரத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில்  அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உமேஷ்குமார் பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்