புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடப்பதால் பன்னீர்செல்வம் பூங்கா அண்ணா சிலை அகற்றப்பட்டது
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடப்பதையொட்டி அங்கு வைக்கப்பட்டு இருந்த அண்ணாசிலை அகற்றப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதி ஈரோட்டின் அடையாளமாக உள்ளது. இங்கு தந்தை பெரியார் முழு உருவச்சிலை மற்றும் பேரறிஞர் அண்ணா மார்பளவு சிலை ஆகியவை இருந்தன. இந்த 2 சிலைகளும் முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி திறந்து வைத்த சிறப்பு பெற்றவையாகும்.
இந்த சிலைகள் ரோட்டையொட்டி உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் சாலை விரிவாக்க பணிகளுக்கும் சிலைகள் இடையூறாக இருந்தன. எனவே சிலைகளை மாற்று இடத்தில் அமைப்பது குறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. கட்சியினரிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
பணி தீவிரம்
பெரியார் சிலை திராவிடர் கழகம் சார்பிலும், அண்ணா சிலை தி.மு.க. சார்பிலும் வைக்கப்பட்டவையாகும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலை விரிவாக்கம் செய்யவும், சிலைகளை பன்னீர் செல்வம் பூங்காவின் உள்பகுதியில் அமைக்கவும் வேண்டும் என்று தி.க. மற்றும் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 21–ந் தேதி பன்னீர்செல்வம் பூங்கா புதுப்பிக்கும் பணி தொடங்கியது. அண்ணா மார்பளவு சிலைக்கு பதிலாக முழு உயர சிலை அமைக்கவும், பெரியார் முழு உருவச்சிலையை அப்படியே எடுத்து வைக்கவும் பீடங்கள் அமைப்பது, பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அழகுபடுத்துவது, சாலை விரிவாக்கத்துக்கு பின்னரும் சிலை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருப்பது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு பூங்கா புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அண்ணா சிலை அகற்றம்
பணிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தினமும் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அண்ணா மார்பளவு சிலை அங்கு இருந்த பீடத்தில் இருந்து அகற்றப்பட்டது. கடந்த 20–2–1971 அன்று திறக்கப்பட்ட இந்த சிலை 46 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பெரியார் சிலையும் விரைவில் அகற்றப்படுகிறது. புதிய இடத்தில் பீடங்கள் கட்டும்போதே சிலைகள் வலிமையாக பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய பீடங்களில் இருந்து சிலைகள் அகற்றப்பட்டால் உடனடியாக சாலை விரிவாக்கப்பணிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அப்போதுதான் பூங்கா புதுப்பிக்கும் பணி நிறைவடையும்போது அந்த பகுதி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.