தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ராமசாமி தர்மபுரியில் உள்ள முதன்மை கல்வி

Update: 2017-05-11 22:15 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ராமசாமி தர்மபுரியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அடிலம் கிராமத்தை சேர்ந்த இவர் ஓசூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் மாவட்ட கல்வி அலுவலராகவும், தேனி, கரூர், திருச்சி ஆகிய இடங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்