காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Update: 2017-05-11 22:15 GMT

காரைக்குடி,

அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பாலச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஆக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கபடி, யோகா, கோ–கோ, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கான கோடைகால இலவச பயிற்சி நடைபெற உள்ளது. அதன்படி பயிற்சி முகாம் வருகிற 15–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பல்கலைக்கழக விளையாட்டு மைதானங்களில் காலை 6 மணி முதல் 9 மணவி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் 6.30 மணி வரையும் அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தினை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ்

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனர் அலுவலகத்திற்கு நாளை(13–ந்தேதி) மாலை 4 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவ–மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவாக பால், முட்டை மற்றும் பயறு வகைகள் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக விளையாட்டு இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி முகாமில் அனைத்து நாட்களிலும் தவறாது கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் செய்திகள்