திருவண்ணாமலை, போளூரில் வணிகர்கள் கடையடைப்பு
விழுப்புரத்தில் நடைபெறும் வணிகர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, போளூரை சேர்ந்த வணிகர்கள் விழுப்புரம் சென்றுள்ளனர்.;
போளூர்,
விழுப்புரத்தில் நடைபெறும் வணிகர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, போளூரை சேர்ந்த வணிகர்கள் விழுப்புரம் சென்றுள்ளனர்.
இதனால் போளூரில் உள்ள பெட்டி கடைகள், மளிகை கடைகள், துணி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் மூடப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டர்.
இதேபோல திருவண்ணாமலை நகரை சேர்ந்த வணிகர்களும் விழுப்புரம்மாநாட்டிற்கு சென்றிருந்ததால், திருவண்ணாமலையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.