கச்சா எண்ணெய் குழாய் அமைக்க எதிர்ப்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை மணலி சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக,

Update: 2017-05-03 22:30 GMT

திருவொற்றியூர்,

 மணலியில் இருந்து சென்னை துறைமுகம் வரை 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை சாலை வழியாக சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதால் உடனடியாக கச்சா எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னிந்திய மீனவர் நல சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் பாரதி தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கெண்டு கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி பி.மாறன், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு மீனவர் முற்போக்கு சங்க தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்