திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல் தொடர்பான ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல் தொடர்பான ஆய்வு கூட்டம்.

Update: 2017-04-27 21:01 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், மழைநீரை முழுமையாக சேமிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், நீர்வழி தடங்களை முறைப்படுத்துதல் மற்றும் குளக்கரைகளை பலப்படுத்துதல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பொதுப்பணி துறையினர், அரசு துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டமிட்டு இந்த பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக் டர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) மைக்கேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிரி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வெற்றி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்