வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மின்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-26 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், மின்கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்திட வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பசவராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தலைவர் சதீஸ்குமார், ஐக்கிய சங்க தலைவர் ஆல்பர்ட் சேவியர், அம்பேத்கர் சங்கம் தனபாலன், தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் தேசிங்குராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் லட்சுமணா, பொருளாளர் ராஜமாணிக்கம், சி.ஐ.டி.யு. செயலாளர் கருணாநிதி, பொருளாளர் முனுசாமி, ஐக்கிய சங்க அமைப்பு செயலாளர் சவுந்தரராஜன், செயலாளர் கிரிதரன் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்