குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

Update: 2017-04-25 22:45 GMT
மீன்சுருட்டி,

மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் கிராமம் உள்ளது. இந்த கிராம பொதுமக்களுக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் கிணற்றில் நீர் இல்லாததால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள நெல்லித்தோப்பு, இளையபெருமாள் நல்லூர் கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி நேற்று முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் முத்துசேர்வாமடம் கிராமத்திற்கு விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போ ராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்