‘ஆபாச படத்தை பரப்புவேன்’ முன்னாள் மனைவியை மிரட்டியவர் கைது
சத்தாரா பகுதியை சேர்ந்த 30 வயது விவாகரத்தான பெண்ணின் முன்னாள் கணவர் புனேயில் வசித்து வந்தார்.
புனே,
முன்னாள் கணவர் சமீபத்தில் விவாகரத்தான மனைவியின் ஆபாச படத்தை அவரது செல்போனுக்கு அனுப்பினார். மேலும் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால், அந்த ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புனே, பாரதிவித்யா பீத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் மனைவியை மிரட்டிய கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.