கொங்கணாபுரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கொங்கணாபுரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-04-19 22:30 GMT

எடப்பாடி,

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து புதிய மதுக்கடைகளை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் எடப்பாடியில் உள்ள ஒரு மதுக்கடை மூடப்பட்டதை தொடர்ந்து அதற்கு பதிலாக பெரியநாச்சியூர் காட்டுவளவு பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்த மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தரையில் அமர்ந்து மதுக்கடையை மூட வேண்டும் என்று கோ‌ஷம் போட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி போலீசார் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை மூடக்கோரி மனுகொடுத்தால் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்