வருகிற 29, 30–ந் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு: 28,684 பேர் எழுதுகிறார்கள்
ஆசிரியர் தகுதித்தேர்வு வருகிற 29, 30–ந் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 28,684 பேர் எழுதுகிறார்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எலிசபெத் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–1 வருகிற 29–ந் தேதியும், தாள்–2 வருகிற 30–ந் தேதியும் என 2 நாட்கள் நடக்கிறது. தாள் 1 தேர்வு, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, அமலா கான்வென்ட், மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட், எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்காட் கிறிஸ்டின் பள்ளி என மொத்தம் 10 மையங்களில் நடக்கிறது. தேர்வை 4,171 பேர் எழுதுகிறார்கள்.
இதுபோல தாள்–2 தேர்வு மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 54 மையங்களில் நடக்க இருக்கிறது. தேர்வை 24,513 பேர் எழுத இருக்கிறார்கள். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்–1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை மாவட்டம் முழுவதும் மொத்தம் 28,684 பேர் எழுதுகிறார்கள்.
விதிமுறைகள்
தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வு மைய நுழைவாயிலில் காவலர் சோதனை நடைபெறும். தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு முனை பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு நேரத்தில் வெளியே செல்ல அனுமதி இல்லை. தேர்வு முடிந்ததும் ஒ.எம்.ஆர். விடைத்தாளின் பிரதியை தேர்வர் பெற்று செல்ல வேண்டும். அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை. செல்போன், மடிக்கணினி போன்றவற்றை தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது. தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன் முறைத்தவறி நடப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த விதிமுறைகள் பின்பற்றாத தேர்வர்கள் தேர்வை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படாததோடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். மேலும் போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.