தஞ்சை பெரியகோவில் முன்பு அகழியில் திடீர் தீ விபத்து

தஞ்சை பெரியகோவில் முன்பு அகழியில் திடீர் தீ விபத்து

Update: 2017-04-19 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலை சுற்றி அகழி உள்ளது. பெரியகோவில் நுழைவுவாயிலின் வலதுபுறம் அகழியையொட்டி உள்ள கோட்டைசுவரில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் நடைபெற்ற இடத்தின் அருகே அகழியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த குப்பைகள், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த பகுதியில் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த பகுதியில் கூடுகட்டி இருந்த விஷ வண்டுகளை அழிப்பதற்காக சிலர் தீ வைத்த போது அந்த பகுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்