டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாலி அறுக்கும் போராட்டம்
திருமானூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தாலி அறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் திருப்பெயர் கிராமம் செல்லும் சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. தற்போது, அந்த டாஸ்மாக் கடை குந்தபுரம் சாலையில் திறக்கப்பட உள்ளது. இதற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அந்த டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வெற்றியூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கடையின் முன்பு நேற்று தாலி அறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 2 பேர் கழுத்தில் காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு பிணம் போல் படுத்திருக்க பெண்கள் வேடம் அணிந்த ஆண்களும், பெண்களும் ஒப்பாரி வைத்தனர். பின்னர், பெண்கள் வேடம் அணிந்த ஆண்கள் பிணம் போல் படுத்திருந்தவர்களின் அருகே சென்று தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து, நெற்றியில் இருந்த குங்குமத்தை கலைத்துக் கொண்டு அழுதனர். இந்த நூதன போராட்டம் அந்த வழியாக சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
கோஷம்
இந்த போராட்டத்தின்போது, ‘தடை செய்! தடை செய்! டாஸ்மாக் கடையை தடை செய்!’ என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். மேலும் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் இந்த பகுதி மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.
இந்த போராட்டத்தில், சமூக ஆர்வலர் சுயம்பிரகாசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.