குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-04-19 22:30 GMT
மணப்பாறை,

மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட தீராம்பட்டி பகுதி யில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக் கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து நகராட்சி அதி காரிகளிடம் வலியுறுத்தி யும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தீராம்பட்டி அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக் கப்பட் டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கருணாகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பி னும் தொடர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இந் நிலையில் பஸ்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் சிலர் இறங்கி வந்து பொதுமக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு தள்ளு- முள்ளு ஏற்பட்டது. மேலும் மணப்பாறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய போது போலீசாருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், குடிநீர் கிடைக்க நகராட்சியின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீசார் கூறி யதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறிய லால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் வையம்பட்டியை அடுத்த முகவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பாட்டிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை வையம்பட்டி - கரூர் சாலையில் மண்பத்தை அருகே மறியலில் ஈடுபட்டனர். வையம்பட்டி போலீசார் மற்றும் வையம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மருதுபாண்டியன் ஆகியோரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மேலும் தொட்டியம் அருகே உள்ள எம்.புத்தூர் ஊராட்சி சத்திரம் கிராமத்தில் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தொட்டியம்-காட்டுப்புத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்