குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6-ல் அண்ணாவி நகர் பகுதி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தண்ணீர் இருந்தும் கூட பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலை உள்ளது. இதே போன்று இன்னும் சில ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இருந்தும் அதில் போதுமான அளவு குழாய் இல்லாத நிலையிலும், மின்மோட்டார் இல்லாததாலும் மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் இந்த பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் குடிநீர் வரும் போது மிகவும் கலங்கலாக, சேறுடன் கலந்து வருகிறது.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலக வாசல் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் வசந்த் பெரியசாமி, நகர செயலாளர் கோவிந்தராஜன், மாவட்டப் பிரதிநிதிகள் உள்பட தே.மு.தி.க.வினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் பாப்பம்மாள் மற்றும் பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.