முதல்–அமைச்சர் நாராயணசாமி 2–வது நாளாக டெல்லியில் முகாம்
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் மாநில வளர்ச்சித் திட்டங்களுக்காக கூடுதல் நிதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்.
புதுச்சேரி,
இதற்காக அடிக்கடி டெல்லி சென்று மத்திய மந்திரிகளை அவர் சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் புதுவையில் இருந்து டெல்லிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நேற்று மத்திய அரசு அதிகாரிகள் சிலரை அவர் சந்தித்து பேசினார். ஜனாதிபதி, உள்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்காக இன்று 2–வது நாளாக நாராயணசாமி அங்கு முகாமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மத்திய உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் கூடுதல் நிதி பெறுவது குறித்தும் பேச உள்ளார். அப்போது புதுவை கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களிடம் புகார் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புகள் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி திரும்புகிறார்.