ஆசிரியை தற்கொலை வழக்கில் கணவர் கைது
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் பொன்மொழி (வயது 33). இவரது மனைவி விஜயலட்சுமி (27).
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம், பிள்ளையார்பாளையம், சி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் பொன்மொழி (வயது 33). இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 16–ந் தேதி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி ஆசிரியை விஜயலட்சுமியின் தம்பி ஹரிபாபு பெரிய காஞ்சீபுரம் போலீசில் விஜயலட்சுமியின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார்.
இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பொன்மொழியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்மொழியை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.