மூங்கில்துறைப்பட்டு அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொது மக்கள் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு அருகே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-04-19 22:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டில் கோவில் தெரு, மணலூர் சாலை, சேராப்பட்டு சாலை, கிழககு தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மககள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நேற்று காலை சங்கராபுரம்– சேராப்பட்டு சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெகடர் இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொது மக்கள், எங்கள் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேகக தொட்டிககும் தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிககையும் எடுககப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கும், வெகு தொலையில் உள்ள விவசாய நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிகை எடுககப்படும் என்று கூறினர்.

இதை ஏற்ற பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சஙகராபுரம– சேராபபடடு சாலையலசுமார் ஒரு மணி நேரம் போககுவரத்து பாதிககப்பட்டது.

மேலும் செய்திகள்