மதுக்கடை திறப்பதை கண்டித்து கருப்புக்கொடியுடன் ஊர்வலம்

ஆனைமலை அருகே மதுக்கடை திறப்பதை கண்டித்து கருப்புக்கொடியுடன் ஊர்வலம்

Update: 2017-04-19 22:30 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த ஒடையகுளம் பேரூராட்சி அசோக்நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அசோக்நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்த நிலையில் அசோக்நகர் பகுதியில் மதுக்கடை அமைக்க உள்ளதை கண்டித்து அந்த பகுதி மக்கள் நேற்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். பின்னர், 500–க்கும் மேற்பட்டவர்கள் கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் மதுபான கடை அமைக்க தேர்வு செய்த இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் ஆனைமலை போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க மாட்டார்கள் என்று போலீசார் தெரி வித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்