மீன்பிடி தடை காலம் எதிரொலி திசையன்விளை மார்க்கெட்டில் மீன், கருவாடு விலை கிடுகிடு உயர்வு
மீன்பிடி தடை காலம் எதிரொலியாக, திசையன்விளை மார்க்கெட்டில் மீன், கருவாடு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.;
திசையன்விளை,
மீன்பிடி தடை காலம் எதிரொலியாக, திசையன்விளை மார்க்கெட்டில் மீன், கருவாடு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
விசைப்படகில் மீன்பிடிக்க தடை
கடலில் மீன் உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக விசைப்படகு மூலம் கடலில் மீன் பிடிப்பதற்கு அரசு 45 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் கட்டுமரம் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இங்கு விசைப்படகு மூலம் மீன்பிடி தொழில் நடைபெறவில்லை.
நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீன்கள் மட்டுமே திசையன்விளை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. முன்பு தூத்துக்குடி, ராமேசுவரம் கடலில் விசைப்படகு மூலம் பிடிபடும் மீன்களும், திசையன்விளை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். தற்போது கோடை விடுமுறை என்பதால் வெளியூரில் வசித்து வந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதனால் மீன்களை வாங்கிச் செல்ல மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
விலை உயர்வு
மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மீன்பிடி தடை காலத்துக்கு முன்பு சாளை ரக மீன்கள் 10 ரூபாய்க்கு 10 முதல் 15 எண்ணிக்கை வரையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று 10 ரூபாய்க்கு 3 முதல் 4 சாளை மீன்களே விற்பனை செய்யப்பட்டது. கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நெத்திலி ரக மீன் தற்போது 100 ரூபாய்க்கும், ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படும் வலை மீன் தற்போது ரூ.200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கிலோ 70 ரூபாய்க்கு விற்ற பன்னா ரக மீன் தற்போது 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் துப்புவாளை, சீலா, குதிப்பு, மாவிளா உள்பட அனைத்து ரக மீன்களும் இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது.
கருவாடு விலையும் உயர்ந்தது
மீன் விலை உயர்ந்துள்ளது போல் கருவாடு விலையும் உயர்ந்துள்ளது. முன்பு 100 கிராம் சாளை ரக கருவாடு ரூ.70 முதல் 80 வரை விற்பனையானது. நேற்று ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோ 150 ரூபாய்க்கு வலை மீன் கருவாடு நேற்று 300 ரூபாய்க்கு விற்றது. நெத்திலி கருவாடு, மஞ்சள் பாறை கிலோ 300 ரூபாய்க்கும், சூறை கருவாடு 150 ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போல் அனைத்து ரக கருவாடுகளும் விலை உயர்ந்துள்ளது. மேலும் விலை உயரக்கூடும் என கருவாடு வியாபாரிகள் தெரிவித்தனர்.