இயற்கை உரத்தை பயன்படுத்தினால் விவசாயத்தில் அதிக மகசூல் பெற முடியும்
இயற்கை உரம், சுழற்சி முறையில் நெல் பயிரிடுதல் போன்றவற்றால் அதிகமான மகசூல் பெற முடியும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
கரையாம்புத்தூர்,
புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூரில் வேளாண்மை துறை சார்பில் உழவர் உதவியக ஆத்மா குழுவிற்கு நெல் அறுவடை எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அதிகாரி பரமநாதன் வரவேற்றார். ஆத்மா திட்ட இயக்குனர் ரவிப்பிரகாசம் நோக்க உரையாற்றினார். அறுவடை எந்திரத்தை வழங்கி அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்த பகுதி நல்ல நிலத்தடிநீர் வளம் உள்ளதாக விளங்கி வருகிறது. இங்கு வழங்கப்பட்ட நெல் அறுவடை எந்திரத்தை ஆத்மா குழு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதனை கேட்டபோது பெருமையாக இருந்தது. அதுபோல் மகளிர் ஆத்மா குழுவினரும் நல்ல முறையில் செயல்பட வேண்டும். இயற்கை உரம், சுழற்சி முறையில் நெல் பயிரிடுதல் போன்றவற்றால் அதிகமான மகசூல் பெற முடியும். வீட்டிற்கு ஒருவர் வேளாண் துறைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., விஜயவேணி எம்.எல்.ஏ., அரசு செயலாளர் மணிகண்டன், வேளாண்மை துறை இயக்குனர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியின்போது ஆத்மா கால்நடை வளர்ப்பு குழுக்களுக்கு கிரிராஜா கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
தீயணைப்பு நிலையத்துக்கான இடம் ஆய்வு
இதன்பின் கரையாம்புத்தூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி., விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாகூர் கோட்ட வேளாண்துறை துணை இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை, ஆத்மா மேலாளர் பக்தவச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.