நாகர்கோவிலில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் பரிதாப சாவு
நாகர்கோவிலில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் கே.பி.ரோட்டில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அமைந்துள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தின் ஷோரூமை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் குளிர்சாதனம் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குளிர்சாதன நிறுவனத்தின் சார்பில் பணியாளர்கள் வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் அருகே உள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 46) என்ற ஏ.சி. மெக்கானிக் அந்த ஷோரூமின் பின்புறபகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 12 அடிக்கு மேலே சாரத்தில் நின்று குளிர்சாதனம் பொருத்தும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார்.
பரிதாப சாவு
அப்போது திடீரென அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. மேலும் இரும்பு கம்பிகளினால் அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் நின்றபடி அவர் பணியில் ஈடுபட்டிருந்ததால் அந்த கம்பிகளிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் முருகன் அந்த சாரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய முருகனை கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
அப்போது நாடித்துடிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஏற்றிச்செல்ல மறுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள முருகனின் மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.