அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் கலெக்டர் தகவல்

தா.பழூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-04-18 22:45 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூருக்கு நேற்று கலெக்டர் சரவணவேல்ராஜ் வருகை தந்தார். பின்னர் அவர் தா.பழூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரிடம் தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துடன் கூடிய கழிவறை வசதி, குடிநீர் வசதிக்கு தேவையான உபகரணங்கள், குடியிருப்பு வசதி மற்றும் வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சுகாதார துறையினர் முன் வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், தா.பழூர் அரசு மருத்துவ மனைக்கு குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவை உடனடியாக செய்து அடிப் படை வசதிகள் மேம்படுத்தப் படும், மேலும் குடியிருப்பு வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.

உத்தரவு

இதைத்தொடர்ந்து கலெக்டர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், ராஜா, தா.பழூர் அரசு மருத்துவமனை டாக்டர் கருணாகரன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்