மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதை கண்டித்து நாகையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதில் நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 47 கடைகள் மூடப்பட்டன. இதில் நாகை திருமேனிச்செட்டி தெருவில் இருந்த ம துக்கடையும் அடங்கும். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இதை கண்டித்து நேற்று பாரதீய ஜனதா கட்சி சார்பில் மதுக்கடைக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். கட்சியை சேர்ந்த இளஞ்செழியன், கீதா, வானிஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நேதாஜி கலந்து கொண்டு பேசினார்.
முற்றுகையிட முயற்சி
ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் முற்றுகையிட சென்றவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது. பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் பா.ஜ.க.வை சேர்ந்த ஜீவா, கலாசுந்தரமூர்த்தி, கணேசன், ஜமுனாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல்
அதேபோல் திருமருகல் ஒன்றியம் வாழ்குடியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், ஒன்றிய பொது செயலாளர்கள் அனந்தகிருஷ்ணன், விவேக்ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வாழ்குடி மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய துணை தலைவர் நந்தக்குமார், ஒன்றிய செயலாளர் வாழ்குடிசுரேஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கனகராஜ், ஒன்றிய பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.