புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-18 22:45 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாத மருத்துவப்படியை ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

கோஷங்கள்

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்களை தட்டுப்பாடின்றி வினியோகம்செய்ய வேண்டும் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முடிவில் மாவட்ட செயலாளர் சவுரிராஜ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்