இளம்பெண் மர்ம சாவு அடித்துக்கொலை செய்ததாக தந்தை போலீசில் புகார்
திருச்சியில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரை அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக, அவரது தந்தை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம்,
திருச்சி சீனிவாசநகரை சேர்ந்த நசீர் உசேனின் மனைவி சர்மிளா (வயது 33), இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டு ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சர்மிளா தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக சர்மிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
ஆனால் சர்மிளாவின் தந்தை பாபு தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், என்னுடைய மகள் சர்மிளாவின் திருமணத்தின் போது நசீரின் குடும்பத்திற்கு 13 பவுன் நகை கொடுக்கப் பட்டது. திருமணம் முடிந்த 4 மாதங்கள் கழித்து நசீரின் குடும்பத்தினர் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் சர்மிளா தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார்.
பின்னர் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்து நசீரிடம் சேர்த்து வைத்தேன். கணவர் வீட்டில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சர்மிளா மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சர்மிளா தனது கணவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உதவி கலெக்டர் விசாரணை
இதனை தொடர்ந்து நான் அங்கு சென்று பார்த்த போது சர்மிளா தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். மேலும் அவரது கால்கள் தரையை தொட்டபடியும், முகத்தில் துணி கட்டி இருந்தது. எனவே எனது மகளை துன்புறுத்தி யாரோ அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்மிளாவின் கணவர் நசீர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆகுவதால் உதவி கலெக்டர் கணேஷ்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சர்மிளா உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து, உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை வந்த பிறகு தான் சர்மிளா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.