எடையளவு குறித்து புகார் தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகம்

எடையளவு குறித்து புகார் தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகம்: திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளர் அறிவிப்பு;

Update: 2017-04-18 23:30 GMT
திருப்பூர்,

எடையளவுகள், பொட்டலப்பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் செயலி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) முருகேசன் தெரிவித்துள்ளார்.

செல்போன் செயலி

தொழிலாளர் ஆணையாளர் பாலசந்திரன் உத்தரவுப்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் மாரிமுத்து, கோவை தொழிலாளர் துணை ஆணையாளர் தமிழரசி ஆகியோர் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் எடையளவுகள் தொடர்பான குறைகள் மற்றும் தாங்கள் வாங்கும் பொட்டலப்பொருட்களின் குறைகளை தெரிவிக்க புதிதாக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பொட்டலப்பொருட்களில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, நிகர எடை, பொருட்கள் தயாரிக்கப்பட்ட மாதம், வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை இவற்றில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் TN-L-M-C-TS என்ற செல்போன் செயலி மூலம் தொழிலாளர் ஆய்வாளர்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலும் பொட்டலப்பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம்.

செல்போன் எண்கள்

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை ஆய்வாளர்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி விவரம் வருமாறு:-

94453 98772, 94454 99482, 94454 99483, 94454 99484, 94454 99485, 94454 99486, 94454 99487, 94454 99488, 94454 99489 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும்

ins-l-a-bt-pr@gm-a-il.com,

tupd-il@gm-a-il.com,

di-l-d-a-r-a-pu-r-am@gm-a-il.com,

ail1tpr@gm-a-il.com,

assti-ns-l-ab2tpr@gm-a-il.com,

assti-ns-l-ab3tpr@gm-a-il.com,

ai-l-k-a-n-g-ey-am@gm-a-il.com,

ai-l-d-a-r-a-pu-r-am@gm-a-il.com,

ai-lu-du-m-a-l-pet434@gm-a-il.com ஆகிய மின்னஞ்சல் மூலமும் நுகர்வோர் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம். நுகர்வோரிடம் இருந்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது மேற்கண்ட குறைகள் தொடர்பாக புகார்கள் பெற்றால் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்களின் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விழிப்புணர்வு கூட்டம்

மேலும் இதுதொடர்பாக நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர்(பொறுப்பு) முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி (திருப்பூர்), திருஞானசம்பந்தம் (தாராபுரம்), உதவி ஆய்வாளர்கள் சண்முகவேலு (திருப்பூர் 1-ம் வட்டம்), வெங்கடாசலம் (திருப்பூர் 2-ம் வட்டம்), இளங்கோவன் (காங்கேயம்), திருக்குமரன் (தாராபுரம்), குருபிரசாத் (உடுமலை), முத்திரை ஆய்வாளர்கள் மணிமேகலை (திருப்பூர் 1-ம் வட்டம்), குமாரசாமி (தாராபுரம்), ரமேஷ்பாபு (உடுமலை) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) முருகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்