திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் காலிக்குடங்களுடன் நாகல்நகர் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Update: 2017-04-18 22:30 GMT

திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல்நகர் 36–வது வார்டு பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, சேலாங்கண்ணி குறுக்குத்தெரு உள்பட 6 தெருக்களில் திடீரென குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நாகல்நகர் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் நாளை காலை (அதாவது நேற்று) குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் அதிகாரிகள் கூறியபடி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 2–வது நாளாக நேற்றும் நாகல்நகர் மேம்பாலம் பகுதியில் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம், குழாய்கள் மூலம் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்