பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியான விவகாரம் முன்னாள் மந்திரிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கவில்லை

முதல்–மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் கலால்துறை மந்திரியாக இருந்தவர் எச்.ஒய்.மேட்டி. இவர், பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ

Update: 2017-04-18 22:30 GMT

பெங்களூரு,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிகளில் வெளியானது. மேலும், உதவி கேட்டு சென்ற பெண்ணிடம் மந்திரி தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை எச்.ஒய்.மேட்டி முற்றிலுமாக மறுத்தார். இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். எச்.ஒய்.மேட்டி, வீடியோவில் இருந்த பெண் உள்பட பல்வேறு நபர்களிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் முன்னாள் மந்திரி எச்.ஒய்.மேட்டிக்கு எதிராக நம்ப தகுந்த வகையிலான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி முழுமையான அறிக்கை தயாரித்துள்ள சி.ஐ.டி. போலீசார் விரைவில் அந்த அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்