மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் 260 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
தமிழகம் முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த கடைகளை வேறு பகுதியில் அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரியும், கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நீலமேகம், நகர செயலாளர் தினேஷ்குமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர், கெலமங்கலம்
ஓசூரில் தாலுகா அலுவலக சாலையில் அண்ணா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனிராஜூ தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் நகர தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் ராஜி, மாவட்ட பொதுச்செயலாளர் வரதராஜன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டையில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகர தலைவர் பார்த்திபன் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கெலமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் எம். நாகராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் மதிவதனகிரி, நகர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
260 பேர் கைது
தளியில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய பா.ஜனதா தலைவர் பாஸ்கர்ரெட்டி மற்றும் கட்சியினரையும், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர். பர்கூரில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்ததாக மொத்தம் 18 பெண்கள் உள்பட 260 பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.