தமிழ் ஆட்சி மொழி திட்டத்தை செயல்படுத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு
நெல்லை மாவட்டத்தில், தமிழ் ஆட்சி மொழி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய, பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ் ஆட்சி மொழி
தமிழ் ஆட்சி மொழி திட்டத்தை அரசு அலுவலகங்கள், சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் செயற்படுத்துவதில் ஊக்கமும், ஆக்கமும், திறமையும் கொண்ட அரசு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசும், பாராட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஊழியர்களுக்கு பரிசு
இதையொட்டி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட நிலை அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை அலுவலகங்கள், சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனம் மறறும் தன்னாட்சி நிறுவன சார்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களில், தமிழில் சிறந்த வரைவுகள், கோப்புகள் எழுதிய ஊழியர்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 என வழங்கப்பட்டு வருகின்றன.
போட்டியில் பங்கேற்பது எப்படி
இப்பரிசுப் போட்டியில் கலந்து கொள்ளப் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு ஊழியரின் இரண்டு கோப்புகள் தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். கோப்புகள் ஒவ்வொன்றும் கையால் எழுதப்பட்டு இருந்தால் 20 பக்கங்களுக்குக் குறையாமலும், கம்ப்யூட்டர் அச்சில் இருந்தால் 10 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்கவேண்டும். கோப்புகள் போட்டிக்குரியவரால் மட்டும் தொடர்ந்து பேணப்பட்டிருக்க வேண்டும்.
கோப்புகள் போட்டிக்குரிய ஆண்டில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தொடக்கம் எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த திட்டத்தில் அனைத்துத்துறை அரசு ஊழியர்களும் பங்கு பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.