ஏ.டி.எம். எண்ணை கேட்டு விவசாயி வங்கி கணக்கில் ரூ.37 ஆயிரம் மோசடி

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 66). விவசாய கூலித்தொழிலாளி. இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

Update: 2017-04-18 19:30 GMT
நெல்லை,

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 66). விவசாய கூலித்தொழிலாளி. இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் சங்கரலிங்கத்தின் வங்கி ஏ.டி.எம். கார்டு குறித்து பேசினார்.

ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணின் காலக்கெடு முடிந்து விட்டது, எனவே பழைய எண்ணை தெரிவிக்குமாறு கேட்டார். இதை நம்பிய சங்கரலிங்கம் ரகசிய எண்ணையும், ஏ.டி.எம். கார்டு எண்ணையும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து வங்கி கணக்கில் பணம் இருப்பை சரிபார்த்த போது ரூ.37 ஆயிரம் குறைவாக இருந்தது. ரகசிய எண்ணை கேட்ட மர்ம நபர், ஆன்லைன் மூலம் ரூ.37 ஆயிரத்தை மோசடியாக எடுத்து விட்டது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி அதிகாரிகளிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்த போது வடமாநில வாலிபர் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் வழிகாட்டுதலுடன், சங்கரலிங்கம் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாந ல புகார் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதிகாரிகள்

என தெரியவந்துள்ளது. ஏற்கனவே கங்கைகொண்டான், மானூர் பகுதியில் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது.

மேலும் செய்திகள்