பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-18 23:00 GMT

கடலூர்,

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். துணை தலைவர்கள் கோதண்டராமன், மரியதாஸ், இணை செயலாளர்கள் சண்முகவடிவேலு, ராமதாஸ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மதிவாணன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்லசாமி, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணை தலைவர் அலமேலு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோரிக்கைகள்

7–வது ஊதியக்குழுவினை மத்திய அரசின் ஆணைக்கேற்ப, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2014–ல் உள்ள குறைபாடுகளை நீக்கி மருத்துவ செலவு முழுவதையும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்