சிவகங்கையில் டாக்டர் வீட்டில் 20 பவுன் நகை, 2 மடிக்கணினி திருட்டு

சிவகங்கையில் டாக்டர் வீட்டில் 20 பவுன் நகை, 2 மடிக்கணினிகள், செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.;

Update: 2017-04-18 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் டாக்டராக பணியாற்றி வருபவர் பிரியதர்ஷினி. இவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு பிரியதர்ஷினி பிரசவத்திற்காக மதுரை மதுரைக்கு சென்றுள்ளார். முன்னதாக குடியிருப்பு வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

இந்தநிலையில் பிரியதர்ஷினியின் குடியிருப்பு வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த 80 பவுன் நகை, 2 மடிக்கணினிகள், செல்போன் மற்றும் பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

பின்னர் சம்பவத்தன்று பிரியதர்ஷினியின் கணவர் ராஜகனிரியாஸ் சிவகங்கை மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் மற்றும் பின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை, மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனே ராஜகனிரியாஸ் இதுகுறித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்