டி.ஆர்.பட்டினம், கரையாம்புத்தூரில் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை நாராயணசாமி தலைமையில் நடந்தது
புதுவை கரையாம்புத்தூர், காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தில் தீ விபத்துகள் ஏற்படும்போது தீயணைப்பு நிலையங்கள் வெகுதொலைவில் இருப்பதால்
புதுச்சேரி,
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கமிட்டி அறையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன், விஜயவேணி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், துணை கலெக்டர்கள் தில்லைவேலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவுகூட்டத்தில் டி.ஆர்.பட்டினம், கரையாம்புத்தூரில் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பதற்காக சாத்தியக்கூறுகள், அதற்கு தேவைப்படும் பணியாட்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பான கோப்புகளை தயார் செய்ய அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஊர்க்காவல்படை வீரர்கள் 8 பேரை தீயணைப்பு வீரர்களாக நியமிப்பதற்கான பணி ஆணையை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.