தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்

சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

Update: 2017-04-17 22:00 GMT

செங்குன்றம்,

இங்கு ஆண்டுதோறும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப்பணியாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி 2017–2018 ஆண்டிற்கான பயிற்சி வகுப்பு தொடக்கவிழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் தலைமையில் மாதவரம் பால்பண்ணையில் நடைபெற்றது. பயிற்சி நிலைய முதல்வர் பி.ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் திட்ட விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தார். அப்போது கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 92 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்