வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீடு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும், கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய தலைவர் சிவபிரகாசம், ஒன்றிய செயலாளர் நாகராஜன், கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் புலிகேசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகம் முன்பாக விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தமிழரசன், மாதர் சங்க நிர்வாகி மாலாபாண்டியன், கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி, விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஒரு வாரம்
நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு விவசாய தொழிளாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நேதாஜி, கட்சியின் நீடா மங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மகாதேவன், நகர செயலாளர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதேபோல் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப் பினர் வையாபுரி, முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் முருகையன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன் , மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒரு வாரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்னிலம்
நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தீனகவுதமன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், வேலை வாய்ப்பை இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.