மயிலாடுதுறையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்த ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

Update: 2017-04-17 22:30 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஒன்றிய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். மின் மோட்டார்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறியாளர் தெய்வானை மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்