திட்டச்சேரி அருகே லாரி மோதி 2 பேர் படுகாயம் டிரைவர் கைது

திட்டச்சேரி அருகே லாரி மோதி 2 பேர் படுகாயம் டிரைவர் கைது

Update: 2017-04-17 20:54 GMT
திட்டச்சேரி,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருமாளம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் விக்னேஷ் (வயது21). குமாரமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த நாகமுத்து மகன் ஆனந்தராஜ் (37). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த அம்பல் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திட்டச்சேரியை அடுத்த கிடாமங்கலம் அருகே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த விக்னேஷ், ஆனந்தராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திட்டச்சேரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேஷமூலை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வினோத் (27) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்