சின்னதாராபுரம் முனியப்பசாமி கோவில் சித்திரை திருவிழா
சின்னதாராபுரம் முனியப்பசாமி கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரத்தில் முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெரியகாண்டியம்மன், அண்ணன்மார்சாமி, பொன்னர்- சங்கர், தங்காயி அம்மன் ஆகிய சாமிகள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு கணபதி வழிபாடு, 7 மணிக்கு கோமாதா வழிபாடு, 9 மணிக்கு உலக நன்மைக்காக மகாவேள்வி சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு வீரப்பூர் கூவாண்டம் பள்ளத்தில் இருந்து கொண்டு வந்த புனித நீரை அனைத்து சாமிகளுக்கும் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து சாமிகளுக்கும் மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கிடா வெட்டு
2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கிடா வெட்டு பூஜை நடந்தது. இதில் 14 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு அன்னை ஆதிசக்தி அருட்பீட சிவத்திரு கைலாச அடிகளார் காலில் ரத்தத்தை ஊற்றி பூஜை செய்தனர்.
மதியம் 1 மணிக்கு முனியப்பசாமிக்கு அலங்காரம் செய்து சமைக்கப்பட்ட அனைத்து கிடா கறிகளையும், முட்டை, மீன் கறி ஆகியவைகளையும் படையல் இட்டு பூஜை செய்தனர். 2 மணிக்கு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மறு அபிஷேகம்
நேற்று காலை 9 மணிக்கு முனியப்பசாமிக்கு 4 சேவல்கள் அறுக்கப்பட்டு படையலிட்டு மறு அபிஷேகம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அன்னை ஆதிசக்தி அருட்பீட சிவத்திரு கைலாச அடிகளார் பூசாரி மணிகண்டன், முனியப்பசாமி அருளாலய செயலாளர் ராமசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னதாராபுரம் போலீசார் செய்திருந்தனர்.