மணப்பாறையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியல்

மணப்பாறையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-17 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறையில் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள பாக்கித்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். இதே போல் இந்த திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்குவதை தவிர்த்து ஆண்டு முழுவதும் வேலை வழங்கிட வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோவில்பட்டி சாலையில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.

சாலை மறியல்

ஊர்வலத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றதும் அந்த வாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சண்முகானந்தம் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு பழனிச்சாமி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், நகர செயலாளர் உசேன் உள்ளிட்ட பலரும் மறியலில் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்