நெல்லை மாவட்டத்தில், 2–வது கட்டமாக 1 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கலெக்டர் கருணாகரன் தகவல்
நெல்லை மாவட்டத்தில் 2–வது கட்டமாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 715 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
நெல்லை,
இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
2–வது கட்டமாக...நெல்லை மாவட்டத்தில் கடந்த 1–ந் தேதி முதல் நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2–ம் கட்டமாக நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் வீரகேரளம்புதூர், ஆலங்குளம், திருவேங்கடம், மானூர், சேரன்மாதேவி ஆகிய 13 தாலுகாக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 715 கார்டுகள் வந்துள்ளன.
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவதற்கு ஏதுவாக எட்டு இலக்கங்கள் கொண்ட ஒரு முறை பயன்படுத்தும் எண் மற்றும் குறுஞ்செய்தி தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு வரும். அந்த எண் மற்றும் குறுஞ்செய்தியை அழிக்காமல் வைத்து இருந்து நீங்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் ரேஷன் கடையில் காட்டி ஸ்மார்ட் கார்டினை பெற்று கொள்ளலாம்.
செல்போன் எண் அவசியம்மேலும் ஸ்மார்ட்டு கார்டு பெற செல்போன் எண் அவசியம். அதனால் இதுவரை செல்போன் எண் பதிவு செய்யாதவர்கள், ஆதார் எண் பதிவு செய்யாதவர்களும் உடனடியாக ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும். அல்லது www.tnepds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், TNEPDS என்ற செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.