உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டி அருகே உள்ள கொடிக்குளம், மேலூர் பகுதிகளில் உள்ள மாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-17 23:30 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி அருகே உள்ளது கொடிக்குளம் காலனி. இங்கு அரசு மதுபானக்கடை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் கடைகளுக்கு மேல் மூடப்படது. இதனைத் தொடர்ந்து மதுபான பிரியர்கள் கிராமப்புறங்களில் உள்ள கடைகளை நாடிச்செல்கின்றனர். இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்தநிலையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி கொடிக்குளம் கலானியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து வாலாந்து£ர் போலீசார் முற்றைகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, விரைவில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலூர் பகுதிகள்

மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளலூரில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஏராளமான பெண்கள் உள்பட கிராமமக்கள் பல்வேறு வாகனங்களில் மேலூர் சென்று, அங்கு தாசில்தார் தமிழ்செல்வியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதேபோல கிடாரிப்பட்டியில் இயங்கிய டாஸ்மாக் கடையை புலிப்பட்டி அருகே திறக்க முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். திருவாதவூரில் இயங்கிய டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அந்த கிராம மக்கள் மேலூர் வந்து தாசில்தாரிடம் மனுக் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்